கல்லூரிக்குள் வந்த முதல் நாள், ஒரு பெரிய ஹால், அதுல எல்லா மாணவர்களையும் உட்கார வைத்தார்கள். அங்க ஒரு பேராசிரியர் வந்தாரு, தன்னை அறிமுகப்படுத்தினாரு, தமிழ் பேராசிரியர்னு, ரொம்ப ஆச்சரியம். ஏன் தெரியுமா ?
எல்லோரயும் போல நானும் சினிமாவ பாத்து ஏமாந்தவங்க…. தமிழ் வாத்தினாலே காலேஜ்ல காமெடியாவும், அதேமாதிரி வேட்டி சட்டை, திருநீரு பட்டைனு இருந்த, இமேஜ் உடைஞ்சி சினிமாக்காரங்க மேல ஏதோ ஒரு சின்ன பெரிய்ய…கோவம்.
அங்க வந்த பல்வேறு துறை சார்ந்த மாணவர்கள் ஒண்ணா கலந்து இருந்தாங்க. என் பக்கத்துல இருந்தவன் கிட்ட பேர கேட்டேன் அசோக்னு சொன்னான். படப்பைல இருந்து வரேனு அறிமுகப்படுத்திக்கிட்டான் ஆனா இவன் பி.காம் துறை… அங்க ரமேஷ், ராஜேஷ்கண்ணா, துளசி, சரண்யா.. இப்படி பல பேரு அறிமுகப்படுத்திக்கிட்டு இருந்தப்ப எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு அறிமுகமா இருந்தவங்க, ரெண்டுபேர். அவங்க பெயரோட முதல் எழுத்தும் கூட,ஒரே எழுத்துதான்.. ஒரே பள்ளியில் படிச்சவங்க.. நல்ல நண்பர்களா இருந்தாங்க… அதனால அவங்களோட நான் பேசினேன்.. அதில் ஆச்சரியம் என்னான்னா… அவங்க ரெண்டுபேரும் என்னோட துறையைச் சார்ந்தவங்கதான். அப்படி இப்படினு ஏதோ பேசி மதிய சாப்பாட்டுக்கு நான் தான் அவங்க ரெண்டு பேருக்கும் ஸ்பான்சர், கொஞ்சம் கூட கூச்சமில்லாம ரொம்ப வருஷம் பழகுன நட்பா பேசிட்டே சாப்பிட்டாங்க.. எங்க கூட ஒரு தேவதையா ஒரு பொண்ணு சேர்ந்தா…. பேரு உமா….கொஞ்சம் காலேஜ் லெவல நான் அடைஞ்சதா நினைக்கிறப்ப அவ பேசுறதே புரியல… எனக்கு மட்டும் இல்லை என் கூட இருந்த என் நண்பர்களா லன்ஞ்ல இருந்து பதவியேத்துக்கிட்ட விஜய் அண்ட் வினோத் ரெண்டுபேருக்கும் புரியல… அப்படி ஒரு பீட்ட்ட்ட்ட்டர் இங்கிலீசுனா பாருங்களேன். ஆனா அந்த உமா என் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்த காமிப்பானு அப்ப தெரியல எனக்கு…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக