2003 ஜீலை மாதம் கல்லூரிக்கு செல்ல தயாராகி இருந்தேன். பாடப்புத்தகம் இருக்காது, வீட்டுப்பாடம் கிடையாது, ரெக்கார்ட் தொல்லை இல்லை.. இப்படி ஒரு அபிப்ராயம், அதோட புதுசா ஏதோ சாதிக்கப் போறோம்னு மனசுக்குள்ள ஒரு மாய பிரம்மை….. புது பேண்ட்டு… புது சர்ட்டு… புது ஷூ… புது டிபன் பாக்ஸ்… புது பை… இப்படி கலக்கிகிட்டே பல்லவ சாம்ராஜ்யத்துல இருந்து அதாங்க காஞ்சிபுரத்துல இருந்து ரயில புடிச்சு , டிக்கெட் எடுத்து 60கிலோமீட்டர் தாண்டி நான் வந்தேன் சிங்காரமா ஊரு சென்னையினு பேரு… அப்படினு. வந்ததும் ஒரு இடி விழுந்துச்சு பாருங்க.. முத அடி… செம இடி. மனசு தளரல… அது என்னான்னா, ஆபிசுதாங்க கோடம்பாக்கம் காலேஜ் தாம்பரம் பக்கத்துலனு அன்னைக்குதான் தெரிஞ்சது… முதல் முறை ஏமாற்றம். கல்லூரியை பார்க்காமலே நான் சுவாசித்த பச்சையப்பன் கல்லூரியை ஏமாற்றி இங்கு வந்தேன்….
ஊருவிட்டு ஊருவந்து படிக்க போறோம்ல… அதுக்காக முதல் நாள்ல விழுந்த அடி இப்படியா இருக்கணும். கலர் கலரா சென்னை பொண்ணுங்க, சூப்பரான சென்னை வாழ்க்கைனு ஏங்குன என் இளமனசு பட்ட பாடு கொஞ்சம்நஞ்சம் இல்லங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக